போட்டதுபோல்…
அமைதியாக இருக்கிறது. இப்போது இருக்கும் நிலைமையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் என சொல்லத் தகுந்த படங்களை கூட திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடதயாராக இல்லை. மக்களும் அந்த நோக்கத்தில் இல்லை. ஆனால் நம்ம கோடம்பாக்கத்தில் பக்கத்தில் ஒரு வாரமாக ஒரு பரபரப்பு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது.
என்னடா இது நமக்கு தெரியாம என்று காது கொடுத்தால்… அஜித்தின் பெரிய ஹிட் படங்களான வாலி, வரலாறு படங்களின் இந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றியதாகவும்,
இவ்விரு படங்களையும் தனது மகன் அர்ஜுன் கபூரை வைத்து மிகச் சீக்கிரமே ஆரம்பிக்கப் போவதாகவும் ஒரு பேச்சு நிலவிக் கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி கொஞ்சம் ஆழமாக சென்று பார்த்தால், போனிகபூர் இரு படங்களின் உரிமையை வாங்கவில்லை. அவருடைய எண்ணம், செயல் முழுக்க வலிமை படம் மீது இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இந்தியில் சக்கைப்போடு போட்ட பதாய் ஹோ என்னும் படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போவதாகவும், தமிழில் சக்கைப்போடு போட்ட கோமாளி படத்தின் ஹிந்தி உரிமையை வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடப்பாவிங்களா கோமாளி, பதாய் ஹோ, படங்களின் ரீமேக் உரிமையை வாங்கியதால் இவ்வளவு குழப்பமா…?