பிரபலங்களை சுற்றி எப்படி ரசிகர்கள் இருக்கின்றார்களே அந்த அளவு வதந்திகளும் சுற்றி கொண்டிருக்கும். தற்போது பிரபலங்களை மட்டும் அல்ல அவரின் குடும்பங்களையும் வதந்திகள் சுற்றி கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் ஜேசன் பிரிட்டோ சேவியர் தயாரிக்கும் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்றும் அந்த படத்திற்காக அவருக்கு ரூ. 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இது குறித்து பிரிட்டோ சேவியர் கூறும் போது எல்லாமே பொய் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் பற்றி பரவிய தகவல் போலியானது என்பது உறுதியாகியுள்ளது. இப்படி வருவது ஒன்றும் முதல் முறை அல்ல.
இதேவேளை, விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.