அமெரிக்க தூதரை கட்டாயப்படுத்தி மீசையை எடுக்கவைத்த தென்கொரியர்கள்: கசப்பான பின்னணி!

719

தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதரை கட்டாயப்படுத்தி அவரது மீசையை வழிக்கச் செய்துள்ளார்கள் தென்கொரியர்கள்.

தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதரான Harry Harris (63) அவரது மீசைக்காக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவதுண்டு.

அவரது மீசை தங்கள் கடினமான கடந்த காலத்தை நினைவுபடுத்துவதாகக் கூறி, அவரது மீசையை விமர்சித்துவந்தனர் தென்கொரிய அரசியல்வாதிகளும் அமெரிக்க எதிர்ப்பாளர்களும்.

அதற்கு நியாயமான காரணங்களும் உண்டு எனலாம். 1910 முதல் 1945இல் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை தென்கொரியாவை ஜப்பானியர்கள் ஆண்டார்கள். ஆண்கள் கடினமான அடிமை வேலைகளுக்குபடுத்தப்பட்டதோடு, சுமார் 200,000 பெண்கள் ஜப்பான் இராணுவத்தினருக்காக பாலியல் அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டு விபச்சார விடுதிகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.


அதன் தாக்கம் இன்றும் தென் கொரிய பெண்களிடையே ஆறாத காயமாக மாறாத வடுவாக நீடிப்பதால் இன்னமும் தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு கசப்பானதாகவே உள்ளது. அந்த காலகட்டத்தில் தென் கொரியாவை ஆண்ட ஜப்பானிய கவர்னர் ஜெனரல்கள் அனைவருமே மீசை வைத்திருந்தார்கள்!

ஆகவே, தென்கொரியர்கள் இன்னமும் மீசை என்பதை தாங்கள் ஜப்பானியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட காலனி ஆதிக்கத்தின் அடையாளமாகவே பார்க்கிறார்கள். இதற்கிடையில், தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதரான Harry Harrisஇன் தாய் ஒரு ஜப்பானியர் (தந்தை அமெரிக்கர்).

ஆகவேதான், மீசையுடன் உலாவந்த Harryக்கு தென்கொரியாவில் அவ்வளவு எதிர்ப்பு. கடைசியாக,

வேறு வழியின்றி தனது மீசையை மழித்துவிட்டார் Harry. அவரது மீசை மழிக்கப்படும் நிகழ்வை ஒரு வீடியோவாகவே அமெரிக்க தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டது.

ஆனால், தென்கொரியாவில் கடுமையான வெயிலும் ஈரப்பதமும் உள்ளதால், மீசையுடன்மாஸ்க் வேறு அணியவேண்டியுள்ளது கஷ்டமாக இருப்பதாக கூறித்தான் தனது மீசையை மழித்துள்ளார் Harry என்பது குறிப்பிடத்தக்கது.