ஆதி நிக்கி கல்ராணி காதலா?.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்பட தகவல்!

707

டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி, தமிழில் மிருகம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஆதி.

இந்நிலையில் நடிகர் ஆதியுடன் மரகத நாணயம் உள்ளிட்ட இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணி, சமீபத்தில் ஆதி வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதால் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

நடிகர் ஆதியின் தந்தை ரவிராஜா தெலுங்கில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியதோடு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.


கடந்த 14-ம் தேதி இவரது பிறந்தநாளை ஆதி உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் யாரையும் அழைக்காமல் வீட்டில் சிம்பிளாக நடந்த இந்த நிகழ்வில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டுள்ளார். அதற்கான புகைப்படங்களை நடிகர் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஊரடங்கின் போது தனது வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ஆதி நிக்கி கல்ராணிக்கு மட்டும் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மரகதநாணயம் படப்பிடிப்பிலிருந்தே இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. ஆனால் இதுகுறித்து இருவரும் வாய்திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.