ஆறு வருஷம் காதல்.. கர்ப்பமான காதலி.. கல்யாணத்துக்கு நோ சொன்ன காதலன்.. கடைசியில் நடந்த திருப்பம்!!

3324

விருத்தாசலத்தில்..

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் பி.ஏ பட்டதாரி. இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார்.

நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு நிதீஷ்குமார் அடிக்கடி சென்று வருவார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது நாகலட்சுமி 6 மாத கர்ப்பமானார்.

இதனைதொடர்ந்து நாகலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் நிதீஷ்குமார் திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் நாகலட்சுமியை விட்டு விலக ஆரம்பித்துள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி நிதீஸ் வீட்டிற்கு சென்று திருமணம் செய்ய கேட்டுள்ளார். அவரின் பெற்றோரிடமும் கேட்டுள்ளார். ஆனால் நிதீஸ் பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நாகலட்சுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையை அடுத்து நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார்.

அவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து இருவீட்டாரின் முன்னிலையில் விருத்தாசலம் வண்ண முத்துமாரியம்மன் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.