“இந்தியாவிற்கு எதிரான உங்களுக்கு எதுக்கு விசா”..? அமெரிக்க அரசு நிறுவனத்திற்கு எதிராக இந்தியா அதிரடி முடிவு..!

781

அமெரிக்க அரசு நிறுவனமான யு.எஸ்.சி.ஆர்.எஃப்’க்கு இந்தியா விசா தர மறுத்துவிட்டது. மேலும் பாரபட்சமாக நடந்து கொள்ளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு இந்திய குடிமக்களின் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகள் குறித்து குறித்து உச்சரிக்க எந்த தகுதியும் இல்லை என்று கூறியுள்ளது.

இந்தியாவில் மத சுதந்திரத்தின் நிலை குறித்து யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் மேற்கொள்வது துல்லியமற்ற மற்றும் தவறான அவதானிப்புகள் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதை யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் உணரவில்லை என்றும், இந்தியா தொடர்பான தகவல்களை தவறாக சித்தரிக்கும் அத்தகைய முயற்சிகளை நிராகரித்ததாகவும் கூறியது.

இந்தியா, ஏப்ரல் மாதத்தில், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையை நிராகரித்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, பிரிவு 370 மற்றும் 35 ஏ மற்றும் டெல்லி கலவரங்கள் மற்றும் இந்தியாவில் மத சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதையும், “இஸ்லாமியப் போபியா” அதிகரித்து வருவதையும் இந்த அறிக்கை மேலும் மேற்கோளிட்டுள்ளது.


பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு ஜூன் 1’ம் தேதி எழுதிய கடிதத்தில், வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவுக்கு வருகை தர முயன்ற யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் குழுக்களுக்கு விசா மறுத்துள்ளோம். யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் போன்ற ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய குடிமக்களின் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகள் குறித்து உச்சரிக்க எந்த உரிமையும் இல்லை.” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்’இன் கருத்துக்கள் அமெரிக்க நிர்வாகத்தின் அல்லது அமெரிக்க காங்கிரஸின் கருத்தை குறிக்கவில்லை என அமெரிக்க அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்’இன் அறிக்கைகளை தவறானது மற்றும் தேவையற்றது என்று வெளியுறவு அமைச்சகம் முன்னரும் நிராகரித்ததாக ஜெய்சங்கர் கூறினார். “நம் இறையாண்மை மற்றும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விஷயங்களில் இந்தியா எந்தவொரு வெளிப்புற தலையீடும் அல்லது அறிவிப்பையும் ஏற்காது.” என்று மேலும் தெரிவித்தார்.

அந்த நபர்களின் சொத்துக்களை முடக்கி, அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை மறுத்து இந்திய அரசாங்கத்திற்கு பொருளாதாரத் தடைகளை விதிக்க டிரம்ப் நிர்வாகத்திற்கு யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அறிக்கை பரிந்துரை செய்திருந்தது.

எனினும், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் கமிஷனர்களில் ஒன்பது பேரில் மூன்று பேர் இந்த அறிக்கையை ஏற்கவில்லை மற்றும் சர்ச்சைக்குரிய அறிக்கையில் தங்கள் சொந்த கருத்துக்களைச் சேர்த்தனர் என்று கூறப்படுகிறது.