இன்றைய ராசிபலன் (02.11.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

155

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு சம்பளம் கிடைக்கலாம். சில பேருக்கு போனஸ் கிடைக்கலாம். ஜாம் ஜாம் என்று தீபாவளியை கொண்டாட முடிவு கட்டிடுவீங்க. கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மனக்கவலை மறந்து சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். நண்பர்களின் உதவி உங்களுக்கு மனதளவில் சந்தோஷத்தை கொடுக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். உடல் சோர்வு ஏற்படும். சில பேருக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை எல்லாம் வெளிப்படையாக பேசுவீர்கள். இது நாள் வரை இருந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். உறவுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும். வரக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைக்கு உதவி செய்ய உங்க நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். பேட்டரியை ரீசார்ஜ் செய்தது போல எல்லா வேலைகளையும் சீக்கிரமாக முடித்து விடுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வீட்டில் இருப்பவர்கள் மனசு சந்தோஷப்படும்படி நிறைய வேலைகளை செய்ய போறீங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துவீங்க.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனது சந்தோஷமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு தீபாவளி பர்சேஸை முடிக்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். திருமண தடை நிவர்த்தியாகும். விரும்பிய வரன் அமையும். புதிய மனிதர்களின் சந்திப்பு மனநிறைவை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கும். யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். சில பேருக்கு நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் பிரிந்த நண்பர்களை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான சிந்தனை இருக்கும். எந்த குழப்பமும் இல்லாமல் சில பிரச்சனைகளுக்கு நல்ல முடிவை எடுப்பீங்க. நீண்ட நாள் முடிக்க முடியாத பிரச்சனைக்கு இன்று ஒரு முடிவு கட்ட போறீங்க. அது மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும். இரவு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக ஐடியாக்களை கொடுக்கப் போகின்றது. திறமையாக செயல்பட்டு வியாபாரத்தில் சாதிப்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வர வாய்ப்புகள் உள்ளது. பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் மனநிறைவை கொடுக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதம் வரலாம். பெரியவர்கள் சொல்வதை கேளுங்கள். அடம்பிடித்து எந்த வேலையும் செய்யாதீங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். குழப்பங்கள் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்று தடுமாற்றம் இருக்கும். பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. கொஞ்சம் உஷாராக இருந்தால் வரக்கூடிய பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் பேசும் வார்த்தையிலேயே உறுதி இருக்கும். அடுத்தவர்கள் உங்களைப் பார்த்து அப்படியே மிரண்டு போவார்கள். அதாவது கம்பீரமாக இருப்பீங்க. எதிரிகளுக்கு பயம் காட்டும் அளவில் உங்களுடைய தோரணை அமையும். எல்லாரையும் இன்று வெளுத்து கட்ட போறீங்க. ஆனால், மனைவியிடம் மட்டும் கொஞ்சம் அமைதியாக போவது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். நீங்க மனதில் நினைத்தபடி சௌகரியமாக சில விஷயங்கள் நடக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் இருப்பவர்களோடு சேர்ந்து நேரத்தை கழிப்பீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்புக்கு உண்டான முதலீடை செய்வீர்கள். நிறைய விஷயங்களை தனியாக அமர்ந்து யோசிக்க நேரம் கிடைக்கும். வாழ்க்கையில் இதுநாள் வரை நடந்தது, தற்போது நடந்து கொண்டு இருக்க கூடிய விஷயங்களை எல்லாம், சிந்தித்து சந்தோஷப்படுவீர்கள். கஷ்டப்படுவதற்கு எதுவுமே இல்லை என்ற மனப்பக்குவத்திற்கு வருவீர்கள். உங்கள் வாழ்க்கை ருசிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதையோ சாதித்தது போல ஒரு திருப்தி இருக்கும். ஆனால் எப்போதும் போல தான் நாள் இருந்தாலும், அந்த மன நிறைவு இருக்குது பாருங்க, அது கோடி ரூபாய்க்கு சமம். கொஞ்சம் முன்கோபத்தை குறைத்து அடுத்தவர்களை அட்ஜஸ்ட் செய்து போனால் நீங்கள் வாழ்க்கையில் எங்கோ உயர்ந்த செல்வீர்கள். அடுத்தவனுக்கு கூஜா தூக்க மாட்டேன். நான் சொல்வது தான் சரி என்று சென்றாவ் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். ஒன்றுமே செய்ய முடியாது. பாத்துக்கோங்க.