இன்றைய ராசிபலன் (04.12.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

148

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகளில் தடை வரலாம். சில பேருக்கு வேலை செய்யும் இடத்திலிருந்து சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். மழையில் சிக்கி சில பேருக்கு வேலைகள் தாமதமாகும். இன்றைய நாளை கொஞ்சம் முன்கூட்டியே தொடங்கிக் கொள்ளுங்கள். பிறகு செய்து கொள்ளலாமே, என்று எந்த வேலையும் தள்ளி போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொடக்கம் சுறுசுறுப்பாக இருக்கும். எவ்வளவுதான் மழை இருந்தாலும் உங்களுடைய வேலை கெட்டுப் போகாத அளவு பிளான் செஞ்சுப்பீங்க. உடல் ஆரோக்கியம் மேம்படும். படிப்பு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் இருக்கும். பெற்றோர்கள் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு சின்ன பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும். சின்ன பிள்ளைகளுடைய போக்கில் பெரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். பொது இடங்களில் ஏதாவது பிரச்சனை என்றாலும் தட்டி கேட்பீர்கள். உங்களுடைய தைரியத்தை நான்கு பேர் பாராட்டும் அளவுக்கு சில சம்பவங்கள் நடக்கும். பிரச்சனைகளை தட்டி கேட்பதில் தவறு கிடையாது. அதேசமயம் தவறானவர்களிடம் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஜாக்கிரதை, அடுத்தவர்களுக்கு உதவி செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் உஷாரா இருங்க. யாரிடமாவது ஏமாற வாய்ப்புகள் உள்ளது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. யாரையும் எதிர்த்து பேசாதீர்கள். மேலதிகாரிகள் ஏதாவது சொன்னால் கூட, அலசி ஆராய்ந்து பிறகு கேள்விகளை எழுப்ப வேண்டும். தேவையில்லாத பேச்சுக்கள் உங்களுக்கு இன்று பிரச்சினையை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை அமைதி காக்கலாம். தாய்மாமன் வழி கூறவால் ஆதாயம் கிட்டும். கணவன் மனைவி உறவு வலுபெறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றித்த காணக்கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு மழையினால் வேலைகள் தடைப்படும். பிரச்சனை கிடையாது. ரொம்பவும் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்க. மழை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். மற்றபடி புது முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். வேலையில் மேலதிகாரிகளின் அனுசரணையான போக்கு உங்களுக்கு மன நிறைவை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நடக்காத காரியங்களை இன்று கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் நிறைந்த நாள் இது. தேர்வு எழுதி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். வங்கி கடன் பெறலாம். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். செலவுக்கு அதிகமாகவே கையில் பணம் இருக்கும். ஆனால் கொஞ்சம் சேமிப்பில் வையுங்க. மாத இறுதியில் திண்டாட்டம் வரும் போது, இந்த பணம் பயன்படும். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். மனைவியின் மனதை புரிந்து கொண்டு கணவர் சாதகமாக நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் சின்ன சின்ன சங்கடங்கள் இருக்கும். சில பேருக்கு மழையால் வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பொருளை எடுத்துச் செல்ல முடியாமல் சில பேருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. விவசாயிகள் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மழையின் காரணத்தால் சில பேருக்கு வேலையில் பின்னடைவு ஏற்படும். எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இன்று சிக்கல்கள் வரலாம். மற்றபடி எல்லாம் நல்லதாகவே நடக்கக்கூடிய நாள்தான் இது. சகோதர வழி உறவால் நன்மை நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனசில் ஏதோ ஒரு சஞ்சலம் இருக்கும். பிரச்சனைகள் பெருசாக இருக்காது. இருந்தாலும் எதையோ இழந்தது போலவே இருப்பீர்கள். உடல் சோர்வு மனசோர்வு வேலையில் சிக்கலை உண்டு பண்ணிவிடும். ஆகவே மனதை தெளிவுபடுத்த பிடித்த கோவிலுக்கு காலையில் சென்று பிறகு உங்களுடைய அன்றாட வேலையை தொடங்கவும். ஏதாவது ஒரு அம்பாளை மனசில் நினைத்துக் கொள்ளுங்கள் தைரியம் தானாக வரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த அலுவலக பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமான இந்த நாளில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. அதிக கடன் வாங்க வேண்டாம். குறிப்பாக அதிக வட்டி தருபவர்களோடு சாவகாசம் வச்சுக்காதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். மேல் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். இதனால் உடன் வேலை செய்பவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கூட இருப்பவர்களை உங்களுக்கு குழி பறிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. உடன் வேலை செய்பவர்கள் தானே, என்று எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசாதீங்க. கள்ளம் கபடம் இல்லாமல் பழகுவது நல்லது தான். ஆனால் இன்று கள்ளத்தனம் செய்பவர்கள் யார் என்று அறிந்து கொள்வதும் அவசியம் தான்.