இன்றைய ராசிபலன் (11-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1367

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும் . வெற்றி பெறும் நாள்.

 

ரிஷபம்


ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நன்மை நடக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துபோகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம்பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: சின்ன சின்ன சந்தர்ப்பங் களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார் . சாதிக்கும் நாள் .

துலாம்

துலாம்: பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

தனுசு

தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினரின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.