இன்றைய ராசிபலன் (12.01.2024) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

105

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லா விஷயத்திலும் சோம்பேறித்தனத்தோடு நடந்து கொள்வீர்கள். வேலையை முடிப்பதில் சிரமம் இருக்கும். இதனால் டென்ஷன் தலைவலி வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் தவிர்க்க வேலையை சுலபமாக்க சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்த தான் ஆக வேண்டும். ரொம்ப ரொம்ப முக்கியமான வேலையாக இருந்தால் நாளை தள்ளி வைத்து விடுங்கள். அலட்சியப் போக்கோடு எதையும் செய்யாதீங்க. பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். பெரிய பிரச்சினையை கூட போன போக்கில் அசால்டா முடிச்சிடுவீங்க. இதனால் பெரிய பெரிய பாராட்டுகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்க கூட வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பெரிய பெரிய அளவில் பிரச்சனை வந்தாலும் சரி, சின்ன அளவில் பிரச்சனை வந்தாலும் சரி, உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க உறவுகள் நண்பர்கள் கூடவே இருப்பார்கள். ஆகவே சக மனிதர்களின் முக்கியத்துவத்தை இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் யாரை உதாசீனப்படுத்தினீர்களோ அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள இன்று நல்ல சந்தர்ப்பம் அமையும். இன்றைய அனுபவம் உங்களுக்கு நல்ல வாழ்க்கை பாடமாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டும். அலட்சியத்தோடு எந்த வேலையும் செய்யக்கூடாது. சில பேருக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையை சரியாக செய்ய முடியாமல் சில பேர் மேனேஜர், டீம் லீடரிடம் திட்டு வாங்க கூட வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். மனசு சந்தோசத்தில் நிறைவாக இருக்கும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய கடனுக்கு முயற்சி செய்யலாம். நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை. கன்னி

கன்னி

ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எதிரிகளை போராடி வெல்லக் கூடிய அளவுக்கு உங்கள் மனது உறுதியாக இருக்கும். ஆகவே இன்று எதிரிகளை கண்டு பயப்பட வேண்டாம். சவால் விட்டு பேசுங்கள். பிரச்சனை என்று வந்தால் பார்த்துக் கொள்ளலாம். எவ்வளவு நாள் தான் குட்ட குட்ட குனிந்து கொண்டே இருப்பது. நிமிர்ந்து பார்த்தால் தான் நமக்கு உண்டான மரியாதை கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சுலபமாக வெற்றிக்கான முடியாது. போராட வேண்டி இருக்கும். கவலைப்படாதீங்க கடவுள் உங்கள் பக்கம் இருக்கின்றான். சோர்ந்து போகாமல் எதையும் எதிர்கொள்ளும் மனதோடு இன்றைய நாளை கடந்து செல்லுங்கள். போட்டி பொறாமைகளோடு உங்களை யாராவது வந்து தொந்தரவு கொடுத்தால், தைரியமாக எதிர்த்து போராடுங்கள். கோழைத்தனமாக இருக்காதீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் பதட்டப்படக் கூடாது. உங்களை தோற்கடிக்க நாலு பேர் சுற்றி திட்டம் போடுவார்கள். அந்த சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், நீங்கள் தந்திரமாக செயல்பட வேண்டும். எதிராளி கெட்டவன் தான். ஆனால் எதிரிகளை வீழ்த்த நேரடியாக எந்த வேலையையும் செய்யாதீங்க. கொஞ்சம் சூழ்ச்சியுடன் நடந்து கொண்டால் இன்று வரக்கூடிய பிரச்சனைகளை தப்பிக்கலாம். நீங்கள் குள்ளநரி வேலையை பார்த்து தான் ஆகணும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வர போகின்றது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொஞ்சம் சம்பளம் முன் பின் இருந்தாலும் சரி, உங்களுக்கு மனதிற்கு பிடிக்காத வேலையாக இருந்தாலும் சரி, பணக்கஷ்டத்தை சரி செய்ய ஒரு வேலை தேவை. வரும் வேலையை உதாசீனப்படுத்தாமல் ஏற்றுக் கொள்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சீரான வளர்ச்சி கொண்ட நாளாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு லாபம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சின்ன சின்ன வியாபாரிகள் முதலீட்டில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கண்மூடித்தனமாக அடுத்தவர்களை நம்பாதீர்கள். வீட்டில் மனைவி சொல் பேச்சை கேட்கும் கணவர்மாருக்கு இன்று நல்லது நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். சில விஷயங்களில் என்ன முடிவு எடுப்பது என்று கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடலாம். இருக்கின்ற வேளையில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். மேலதிகாரிகளை மதிக்காமல் பேசக்கூடாது. உதாசீனப்படுத்த கூடாது. உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து நடக்கவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். நீங்கள் இன்று தலைக்கனத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. சில இடங்களில் விட்டுக் கொடுப்பது நன்மையை தரும். பேச்சை குறைக்கவும். செயலில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்துங்கள். வெறும் வாய்சவடால் இன்று உங்களுக்கு கெட்ட பெயரை வாங்கித் தந்துவிடும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.