இன்றைய ராசிபலன் (17-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

696

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்


ரிஷபம்: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

கடகம்

கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இன்று உங்களை அறியாமலேயே ஒருவித தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு வரக்கூடும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்டமான நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்பு கூடும் நாள்.

தனுசு

தனுசு: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து நீங்கும். புதியவர் நண்பர்களாவார்கள். தாய்வழியில் வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பெருகும் நாள்.

மீனம்

மீனம்: சமயோசிதமாகவும். சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அமோகமான நாள்.