இன்றைய ராசிபலன் (24.11.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

80

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய அளவில் நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். மனநிம்மதி பெறுவீர்கள். நீண்ட நாள் சுமையை இறக்கி வைக்கப் போகிறீர்கள். வேலை செய்யும் இடத்திலும், தொழிலிலும் பெரியதாக எந்த பாதிப்புகளும் இருக்காது. வருமானம் போதிய அளவு இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாடு இருக்கும். சிறப்பான இந்த நாளில் குலதெய்வத்தை நினைத்து நன்றி சொல்லுங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் முன்கோபம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன பிரச்சனைகள் வீடு தேடி வரும். அலுவலகம் தேடி வரும். தொழில் செய்யும் இடத்தை தேடி வரும். பிரச்சனை கொடுப்பவர்களை சாதுர்யமாக பேசி சமாளிக்க வேண்டும். தவிர கோபப்பட்டு எறிந்து விழக்கூடாது. கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது. உங்களிடம் இருக்கும் பணம் பொருள் இவைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். சில பொருள் திருடு போக வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன நன்மைகள் நடக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளும் வரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் திட்டுவார்கள். சரியான நேரத்தில் உங்களால் சொன்ன வேலையை செய்து தர முடியாது. அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் சண்டைகள் வரும். வீண் செலவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதிக விலை கொடுத்து ஒரு பொருளை வாங்கி ஏமாற வாய்ப்புகள் உள்ளது. இன்று புதுசா எதையும் வாங்காமல் இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து சமாளித்து போராடி, பொறுமையோடு சரி செய்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் வரும். வருமானத்தில் பிரச்சனை இருக்காது. செலவுக்கு ஏற்ப கையில் காசு இருக்கும். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு இருக்க வேண்டும். அடுத்தவர்களுடைய உணர்ச்சிக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுங்க. உங்களுக்கு பசிக்குது என்றால் அடுத்தவர்களுக்கும் பசிக்கும். நீங்கள் சாப்பிட வேண்டும் என்றால் அடுத்தவர்களும் சாப்பிட வேண்டும். ஆகவே எல்லாம் எனக்காக மட்டும் தான் என்று நினைக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும். சுயநலமில்லாமல், பொதுநலத்தோடு நடந்து கொண்டால் இன்று உங்களுக்கு நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா விஷயத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்த உயர்ந்த வேலையை இன்று செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். யாராவது லீவு போட்டு இருப்பாங்க. அந்த வேலையை இன்று நீங்கள் கவனிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அது உங்களுக்கு பிடித்த பெரிய பதவியில் இருக்கக்கூடிய வேலையாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு நாள் டீம் லீடர் வேலை பார்க்க ஆசைப்படுவார்கள் அல்லவா அது போல தான். மனநிறைவோடு மகிழ்ச்சியோடு அந்த வேலையை செய்வீங்க. நினைத்ததை அடைந்த சந்தோஷம் மனதில் பிறக்கும் நாள் இது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக அமையும். எல்லா விஷயத்திலும் உஷாராக இருப்பீங்க. யாரும் உங்களை அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றிட முடியாது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் குவியும். நீங்கள் எதிர்பார்க்காத நல்லது நடக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடும். தப்பு தப்பா வேலை செய்து திட்டு வாங்க கூடிய வாய்ப்புகள் உள்ளது. கூடுதல் கவனத்தோடு இருங்க. வேலை சமயத்தில் மொபைல் பார்ப்பது. பாட்டு கேட்பது. நண்பர்களிடம் பேசுவது போன்ற அலட்சியமாக நடந்துக்க கூடாது. ராத்திரியில் சில பேருக்கு தூக்கம் வராமல் இருக்கும். நேரத்தோடு படுத்து நல்ல தூங்கினால் தான் ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சோம்பேறித்தனம் இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் கிடப்பில் போட்டு வைத்து தூங்கணும் என்று நினைப்பீங்க. சில பேருக்கு அப்படி செய்ய முடியாது. கட்டாயம் வேலைக்கு போகணும். கட்டாயம் கடைக்கு போகணும் வியாபாரத்தை பாக்கணும், என்ற கட்டாயம் இருக்கும். அதனால் சுறுசுறுப்பை வர வைத்துக் கொள்ள கஷ்டப்பட்டு முன்னேறிய நான்கு பேரை மனதில் நினைத்து கொண்டு வந்து நிறுத்துங்கள். அப்போதுதான் இன்று உங்களுடைய வேலை நடக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பிள்ளைகள் மனைவி என்று குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை கழிப்பீர்கள். உறவினர்கள் வீட்டிற்கு செல்வீர்கள். நீண்ட நாள் சந்திக்காத நபர்களை சந்திப்பீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு இன்றைய நாள் நல்ல வழி வகுத்து தரும். மற்றபடி வேலை வியாபாரம் எதிலும் சொல்லும் அளவுக்கு பெருசா பிரச்சனை இருக்காது உங்க வேலையே நீங்க கவனத்தோடு பாருங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். வருமானம் இருக்காது. செலவுக்கு காசு இருக்காது. என்ன செய்வது என்று அலைமோதுவீர்கள். இதனால் எரிச்சல் வரும். கோபம் வரும். கஷ்டம் தான். கொஞ்சம் பொறுமையாக தான் இருந்தாக வேண்டும். மாதக் கடைசி. பத்து நாட்களை கடந்து செல்வதில் சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். கடவுள் கைவிடமாட்டார் குலதெய்வத்தை நம்புங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். நீங்கள் கொஞ்சம் அடுத்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். சுயநலமாக நடக்கக்கூடாது. தேவைக்கு ஏற்ப சில பேரை பயன்படுத்திக் கொண்டு, தேவையில்லை எனும் போது தூக்கி எறிவது தப்பு என்பதை நீங்கள் உணர்ந்து நடந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். அப்படிப்பட்ட தவறை இனிமை செய்யாதீங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் பருமனோடு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க தேவையான முயற்சிகளை உடனே எடுக்கணும்.