இன்றைய ராசிபலன் (29-07-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

816

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். குடும்ப ஒற்றுமைக்கு விநாயகரை வணங்கி வாருங்கள்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். பயணங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி நிம்மதி உண்டாகும். வாகனங்களில் செல்கின்ற போது நிதானமாக இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதி குறையும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை கையாளும் போது நிதானமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நல்ல லாபத்தை காண முடியும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியிட பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியிட பயணம் செல்ல நேரிடும். பயணத்தில் கூடுதல் கவனம் செழுத்துவது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் தடைக்கு பின் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே அன்பு பெருகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் அதிகம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். சிலருக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.