இறந்த தாயை ஜன்னலில் அமர்ந்து ஏக்கத்துடன் பார்க்கும் மகன்! இதயத்தை கலங்கடித்த புகைப்படம்…. கடும் சோகத்தில் பார்வையாளர்கள்!!

333

கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இறந்தவர்களின் முகத்தினை கூட மிக நெருக்கமானவர்களுக்கு பார்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் கொரோனாவால் இறந்த தாயை மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து பார்க்கும் மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இதயத்தை கலங்கடித்திருக்கிறது.

பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் தாய் ரஸ்மி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில் தாயை பார்க்க மருத்துவமனைக்கு மகன் சென்ற போது தாய் இறந்துவிட்டாதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

தாயை நேரில் கூட பார்க்கமுடியவில்லை என்று கதறி அழுதுள்ளார். அது மாத்தரம் இன்றி, அவருக்கும் கொரோனா தொற்றிவிடும் என்பதால் மருத்துவர்கள் அவரை அருகில் சென்று பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால், மருத்துவமனையின் கட்டிடத்தில் ஏறி இறந்துபோன தனது தாயை சோகத்தோடு பார்த்த காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களை கலங்கடித்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது.