இளம்பெண்ணின் கருமுட்டைகளை திருடிச்செல்ல திட்டமிட்ட கணவன்: வெளியான அதிரவைக்கும் தகவல்!

894

மனைவியை கொல்வது என இணையத்தில் தேடிய கணவனால் மனைவி கொல்லப்பட்ட நிலையில், மனைவியின் கருமுட்டைகளை திருட அந்த கணவன் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Middlesbroughவில் வாழ்ந்து வந்த பார்மசிஸ்டான ஜெசிகா பட்டேல் (34), ஒரு நாள் தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தன் மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்தார் ஜெசிகாவின் கணவர் மித்தேஷ். ஆனால், அது ஒரு நாடகம் என்றும் அவர்தான் ஜெசிகாவை பிளாஸ்டிக் கவர் ஒன்றால் கழுத்தை நெறித்துக்கொன்றார் என்பதும் அவரது ஐபோனை ஆராய்ந்தபோது தெரியவந்தது.

ஒன்பது ஆண்டு திருமண வாழ்வில், ஐந்து ஆண்டுகளை மனைவியை கொல்வது குறித்து திட்டமிடுவதிலேயே செலவிட்டுள்ளார் மித்தேஷ்.

காரணம், மித்தேஷ் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்… ஜெசிகாவை கொன்றுவிட்டு, அவரது இன்சூரன்ஸ் பணத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தனது ஓரினச் சேர்க்கை காதலனுடன் வாழ்க்கையை தொடங்குவதுதான் மித்தேஷின் திட்டம்.


இதற்கிடையில், இன்னொரு கொடுமையான உண்மை தற்போது வெளிவந்துள்ளது. ஆம், மனைவி வேண்டாமாம், ஆனால் அவளது கருமுட்டைகள் வேண்டுமாம் அவருக்கு! கருமுட்டை வங்கியில் உறைநிலையில் சேமிக்கப்பட்டிருந்த ஜெசிகாவின் கருமுட்டைகளை திருடிக்கொண்டு, அவுஸ்திரேலியா சென்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும், அந்த குழந்தைகளுடன், தனது ஓரினச்சேர்க்கை காதலனுடன் வாழவும் திட்டமிட்டுள்ளார் மித்தேஷ்.

தற்போது ஜெசிகா கொலை வழக்கு மீளாய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், பல்வேறு உண்மைகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

ஜெசிகா கொலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 74 பக்கங்கள் கொண்ட மீளாய்வு, பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

ஒன்பது ஆண்டுகள் திருமண வாழ்விலும் மனைவியை மித்தேஷ் கொடுமைப்படுத்தியதும், அந்த திருமணத்திலிருந்து கௌரவமாக வெளியேறுவதற்காக மனைவியை கொல்ல அவர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளதையடுத்து, இது ஒரு கௌரவக் கொலையாக கருதப்படவேண்டும் என மீளாய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.