இவ்வளவு நாளாகியும் மணப்பெண் கிடைக்கலையே… வாலிபர் எடுத்த விபரீத முடிவு!!

257

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர் மதுசூதன்(27). இவர் திருமணம் செய்வதற்காக பல மாதங்களாக மணமகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் மூன்று இடங்களில் மணப்பெண்களைப் பார்த்துள்ளார். ஆனால், மதுசூதனின் தந்தை அநாகரீக நடத்தையின் காரணமாக, மதுசூதனை திருமணம் செய்ய முடியாது என்று அந்த மூன்று மணப்பெண்களும் கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மதுசூதன், மதுவுக்கு அடிமையானார் என்று கூறப்படுகிறது. மதுவை விட்டு விட்டு வேலையில் கவனம் செலுத்துமாறு அவரது உறவினர்கள், மதுசூதனை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனாலும், மணமகள் கிடைக்காத விரக்தியில் இருந்த மதுசூதன் அவர்கள் கூறிய சமாதானத்தை ஏற்கவில்லை. இதன் காரணமாக குடி நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.


இந்த நிலையில் ஜன.5-ம் தேதி மதுசூதன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரைமீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், விஜயநகர் மருத்துவ அறிவியல் கழகத்தில் (விம்ஸ்) சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மதுசூதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து உடலைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுசூதன் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்குப் பின் மதுசூதன் உடலை அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் இன்று ஒப்படைத்தனர். மணப்பெண் கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.