உடன்பிறந்த தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

336

தேனி..

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த விமல் – செல்லப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை என 3 பிள்ளைகள் உள்ளனர்.‌

கஞ்சா வழக்கில் தொடர்புடைய விமல் கடந்த 2 வருடங்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.‌ இதனால் அதே கிராமத்தில் தனது பிள்ளைகளுடன் செல்லப்பிரியா தனியே வசித்து வந்துள்ளார். பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து விமல் வெளியே வந்ததும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

கஞ்சா வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தது தொடர்பாக தம்பதியர் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல தம்பதியர் இடையே தகராறு முற்றியது.


இதனால் ஆத்திரமடைந்த விமல், தனது மனைவி செல்லப்பிரியாவை செருப்பாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.‌ பின்னர் அதே ஊரில் வசித்து வரும் செல்லப்பிரியாவின் உடன் பிறந்த அண்ணனான செல்லப்பாண்டி(34) உடன் இரு சக்கர வாகனத்தில் விமல் சென்றுள்ளார்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய பிறகு இரவு நேரத்தில் போதையில் விமலின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தனது மனைவி செல்லப்பிரியாவிற்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடு அல்லது என்னுடன் கேரளாவிற்கு அனுப்பி வை, இல்லாவிட்டால் அவரை வெட்டிக் கொலை செய்து விடு என செல்லப்பாண்டியிடம் விமல் கூறியுள்ளார்.

அதன்படி தனது தங்கை செல்லப்பிரியாவிடம் ‘உன் கணவர் சொல்வதை கேட்டு அவருடன் சேர்ந்து கேரளாவிற்கு சென்று வாழு’மாறு செல்லப்பாண்டி கூறியுள்ளார்.