உணவகம் ஆரம்பித்து பிரபலமான விமானி!!

334

மலேசியா………..

மலேசியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வேலை இழந்த விமானி ஒருவர், உணவகம் ஒன்றை ஆரம்பித்து பிரபலமடைந்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளால் மலிண்டோ ஏர் விமான நிறுவனம் தனது 2 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது.

இந்நிலையில், வேலையிழந்த 4 குழந்தைகளுக்கு தந்தையான விமானி அஸ்ரின் மொஹமட் சவாவி (Azrin Mohamad Zawawi) சற்றும் மனம் தளராமல் தலைநகர் மலேசியாவின் கோலாலம்பூரில் சிறிய சாப்பாட்டுகு் கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.


அங்கு அவர் மலேசிய உணவு வகைகளான குடும்ப செய்முறையிலிருந்து தயாரிக்கப்பட்ட கறி நூடில்ஸ் டிஷ், லக்ஸா மற்றும் ரோஜாக் என்ற கலப்பு பழ உணவு போன்றவற்றை விற்கின்றார்.

விமான கேப்டனின் வெள்ளை சீருடை மற்றும் ஒரு சிவப்பு நிற கவசத்துடன் அஸ்ரினை மனைவி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் குறித்த புகைப்படம் வைரலான நிலையில், அவரின் உணவகமானது சிறப்பு கவனம் பெற்றுள்ளது.