உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்றச் சென்ற தமிழர் சடலமாக மீட்பு.. நெஞ்சை உறைய வைத்த சோகம்!!

393

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ளது Brecon Becons ஏரி. இந்த ஏரியிலேயே வெள்ளிக்கிழமை உயிருக்கு போராடிய இரு சிறார்களை மீட்கும் முயற்சியிலேயே 27 வயதான தமிழரான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது மீட்பு குழுவினருக்கு இளைஞர் மோகனின் சடலம் கண்டெடுக்க முடியாமல் போயுள்ளது. ஆனால் 7 மணியளவில் Ystradfellte பகுதியில் சடலம் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர்.

மேலும் நீருக்கடியில் செயல்படும் கமெராவை பயன்படுத்தியே அப்பகுதி பொலிசார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். இருப்பினும் கடுமையான காலநிலை சூழல் காரணமாக அடுத்த நாள் பகல் வரையில் நீரில் இருந்து சடலம் மீட்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.


இதனையடுத்து சிறப்பு வீரர்களை வரவழைத்து, சடலத்தை மீட்டுள்ளனர். மோகனின் மறைவை அடுத்து அவர் செயல்பட்டு வந்த Blue Lion’s Badminton அணி நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

மட்டுமின்றி, மோகனின் இறுதிச்சடங்குகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதியும் திரட்டப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் Dyfed-Powys பொலிசார் தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை சுமார் 4.40 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், சிறார்கள் இருவரை மீட்கும் முயற்சியில் ஏரியில் குதித்த நபர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பல தரப்பு அதிகாரிகள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்ததாக தெரிவித்தனர். அத்துடன் பிரித்தானிய ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் சேவையும் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவையும் களமிறக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில் சுமார் 7 மணியளவில் நீருக்கடியில் செயல்படும் கமெராவால் அந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சடலத்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அடுத்த நாள் பகல் வரையில் காத்திருக்கும் சூழல் உருவானதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.