உயிரை பறிக்கும் விஷம் கொண்ட சிலிக்காபாக்கெட்டை இனி தெரியாமகூட தூக்கி வீசாதீங்க? இவ்வளவு நன்மைகள் இருக்கு!

512

கடைகளில் புதியதாக வாங்கும் பொருட்களில் வெள்ளை நிறத்தில் சிறிய சிலிக்கா பாக்கெட் போடப்பட்டிருக்கும்.

புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம்.

ஆனால் அது நம்முடைய வீட்டில் பல விடயங்களுக்கு பயன்படுகிறது. இனி விஷம் என்று வீசாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

எப்படி பயன்படுத்தலாம்

எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழும் மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் சிலிக்கான் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் வைத்தாலே போதும் ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும்.


பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும்.

அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும்.

அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.

பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும்.

இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.

வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம்.

முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம்.

அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும்.

இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.