உழவு இயந்திரத்தில் சிக்கி பலியாகிய விவசாயிஉழவு இயந்திரத்தில் சிக்கி பலியாகிய விவசாயி!

741

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் பண்டாரியாக்கட்டு வயல் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேப்பவெட்டுவான், கிராமத்ததைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயராசா மயூரன் (வயது 27) என்பவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், தனது தந்தையின் நெல் வயலை உழுது பண்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை மாலை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தைச் ஓட்டிச் சென்று நெல் வரப்புக் கட்டில் ஏறும்போது உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளது.


அச்சந்தர்ப்பத்தில் இவர் உழவு இயந்திரத்தின் கீழே நசுங்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே இவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.