எனக்கு 2 லட்சம் பேரம் பேசினார்கள்.. தொட கூடாத இடத்தில் தொட்டான்: பிரபல சீரியல் நடிகை வேதனை!!

62

ஜெயலட்சுமி..

சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லியாகி நடித்து பிரபலமானவர் தான் ஜெயலட்சுமி. இவர் வேட்டைக்காரன், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, விசாரணை, குற்றம், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜெயலட்சுமி, ” மற்ற துறையில் போல சினிமாவில் பெண்களுக்கு பிரச்சனை இருக்கிறது. ஒரு பிரச்சனை நடக்கும் போது அமைதியாக இருந்துவிட்டு அந்த பின் இயக்குனர் அல்லது நடிகர்கள் குறித்து பேசுவது சரியாக இருக்காது”.

“உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொள்கிறார் என்றால் உடனே அது தவறான விஷயம் என்றும் சொல்லுங்கள். அப்போது தான் அவர் அடுத்தவர்களிடம் அந்த தவறை செய்ய மாட்டார். ஒரு முறை நான் பார்க் சென்ற போது ஒருவர் என்னை தொட கூடாத இடத்தில தொட்டான். நான் அவனை தொரத்தி சென்று செருப்பால் அடித்தேன்”.


“சமுதாயத்தில் நடிகைகள் மீது ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். எனக்கு வீட்டில் இருந்து சம்பாதிக்கலாம் என்ற ஒரு மெசேஜ் வந்தது. அதை தொடர்பு கொண்டால். அதில் நடிகைகளின் புகைப்படங்கள் வைத்து பேரம் பேசினார்கள். எனக்கும் இரண்டு லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். எனக்கே தெரியாமல் பேசி இருக்கிறார்கள்” என்று ஜெயலட்சுமி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.