ஐந்து வயது சிறுமியை கத்தியால் வெட்டிய தந்தை கைது!!

800

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாப்புலவு பகுதியில் நேற்றுமுன்தினம் தனது மகளை கத்தியால் வெட்டிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் தீவிர சிசிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் முள்ளியவளை பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.