ஐரோப்பிய நாடுகளை மிஞ்சிய இலங்கை!! நெகிழ்ச்சி அடையும் வெளிநாட்டு பெண்!

798

நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பல்கலைக்கழக பெண் ஒருவர் தொடர்பில் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த பெண் இலங்கையர்களின் அன்பை பார்த்து நெகிழந்து போன செய்தி ஒன்றை ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார்.

சின்டி ஹட்சி என்ற 24 வயதுடைய குறித்த ஆதிவாசிகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மார்ச் மாதம் இலங்கை வந்துள்ளார்.

எனினும் கொரோனா பரவல் காரணமாக அவரால் திரும்பி செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டது. இதனால் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைகழக அதிகாரிகளின் அனுமதியுடன் அவர் அங்கு தங்கியிருந்து தனது பட்டப்படிப்பிற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.


“அண்மையில் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கொரோனா என சந்தேகித்த அதிகாரிகள் வைத்திய பரிசோதனைக்கு என்னை அனுப்பி வைத்தனர். அதற்கமைய பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் எனக்கு கொரோனா இல்லை என உறுதி செய்தனர்.

எனினும் எனக்கு சிறந்த வைத்திய சிகிச்சை ஒன்றை வழங்கினார்கள். ஐரோப்பிய நாடுகளில் கூட இந்த அளவிற்கு சுதந்திரமான மருத்துவ சேவைகள் இல்லை.

இவ்வாறான நிலையில் குணமடைந்த நான் பதுளையில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சென்றேன்.

அங்கு ஏனையவர்களை போன்று மாஸ்க் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றே வரிசையில் காத்திருந்தேன்.

திடீரென நான் அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து விட்டேன். வரிசை நின்ற ஒருவர் உடனடியாக என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு வீட்டவர்கள் நான் யார் என்பதனை கூட அறியாமல் எனக்கு உபசரித்தார்கள். உணவு வழங்கினார்கள். எனக்கு அயடின் குறைப்பாடுகள் உள்ளது. இதனாலேயே எனக்கு மயக்கும் ஏற்படும். எனினும் கொரோனா அச்ச காலப்பகுதியில் அவற்றினை குறித்து யோசிக்காமல் எனக்கு உதவினார்கள்.

மனிதாபிமானம் என்பது எங்கு உள்ளதென பார்ப்பதறகு இலங்கை வரும் எந்தவொரு சுற்றுலா பயணியாலும் உணர முடியும். ஒரு முறையேனும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என நான் அனைத்து வெளிநாட்டவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆதிவாசிகளின் மனநிலை குறித்து ஆய்வு செய்ய வந்த நான் இலங்கையர்களின் அன்பை பார்த்து இலங்கை மக்களின் மனநிலை தொடர்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளேன் அந்த அறிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.