ஐ.டி. அதிகாரி போல் நடித்து இளம்பெண் செய்த மோசமான செயல்!!

98

கிருஷ்ணகிரி…

வருமான வரித்துறை அதிகாரி (ஐ.டி.) போல் நடித்து, ₹1 லட்சம் மிரட்டி பறித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பொதிகை நகரைச் சேர்ந்தவர் பாலாஜி மனைவி ஸ்ருதிலயா (29). பட்டதாரியான இவர், ரயில் நிலையம் எதிரே ஸ்ருதிலயா அசோசியேட்ஸ் என்ற பெயரில் ஆடிட்டிங் அலுவலகம் நடத்தி வருகிறார்.

நேற்று இவரது அலுவலகத்திற்கு மிடுக்காக உடை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் ஸ்ருதிலயாவிடம், தான் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறினார்.

பின்னர் அவர், நீங்கள் ஒருவரிடம் போலியான பான்கார்டு கொடுத்து ஏமாற்றி இருப்பதாகவும், அலுவலகத்தை இழுத்து மூடப்போவதாகவும் கூறியுள்ளார். மேலும், அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டுமானால், தனக்கு ₹1 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ஸ்ருதிலயா, அலுவலகத்தில் வைத்திருந்த பணத்தை எடுத்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.


இருந்த போதிலும், அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஸ்ருதிலயா, அந்த பெண்ணுக்கு தெரியாமல், தனது செல்போன் மூலம் ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதன் பேரில், உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதில், வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வருவதாக கூறிய பெண், தீபா(33) என்பதும், அவர் ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இ-சேவை மையம் நடத்தி வருவதும்,

வருமான வரித்துறை அலுவலக அதிகாரி போல் நடித்து ஏமாற்றி, ஸ்ருதிலயாவிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, தீபாவை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.