ஒரேயொரு வீடியோவால் வைரலான கேரள பெண்!.. காத்திருந்த பிரம்மாண்ட பரிசு!!

766

கேரளாவில் பரபரப்பான சாலையில் பார்வையற்ற நபருக்காக மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பலரும் அப்பெண்ணின் நெகிழ்ச்சி உதவியை பாராட்டினர்.

அப்பெண்ணின் பெயர் சுப்ரியா என்பதும், பிரபலமான நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இரு குழந்தைகளுக்கு தாயான சுப்ரியாவின் கணவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


சிறு குடும்பமாக வாடகை வீட்டில் வசித்து வரும் சுப்ரியாவுக்கு, அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வீடு ஒன்றை பரிசாக வழங்கவுள்ளனர்.

வீடியோ வைரலானதும் குறித்த நிறுவனத்தின் தலைவர் சுப்ரியாவை, அவருடைய வீட்டுக்கே சென்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அத்துடன் திருச்சூரில் இருக்கும் தலைமையகத்துக்கு தன்னை வந்து சந்திக்குமாறும் கூறிச்சென்றுள்ளார்.

அங்கு சுப்ரியா சென்ற போது, அனைத்து ஊழியர்கள் முன்னிலையில் சுப்ரியாவை பாராட்டியதுடன் வீடு ஒன்றை வழங்கப்படும் என அறிவித்தாராம். இதைக் கேட்டதும் சுப்ரியா நெகிழ்ந்து போனார், மேலும் அவர், இவ்வளவு பெரிய ஆச்சரியம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தபோது எனக்கு அழுகையே வந்துவட்டது.

மனிதாபிமான முறையில் சாதாரணமாக நான் செய்த செயல் இவ்வளவு பாராட்டையும் அன்பையும் பெற்றுக் கொடுக்கும் என்று நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.