தமன்னா..
மும்பையை சேர்ந்த தமன்னாவுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வமுண்டு. பாலிவுட் சரியான வாய்ப்புகள் இல்லாமல் தமிழில் வாய்ப்பு தேடினார். பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் தமன்னா சிறப்பாகவே நடித்திருந்தார்.
ஆனால், படம் ஓடவில்லை. ஆனாலும், தமன்னாவுக்கு வாய்ப்புகள் வந்தது. ஒருபக்கம், தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இரண்டு மொழி திரைப்படங்களிலும் மெல்ல மெல்ல முன்னேறி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழில், கமலை தவிர ஏறக்குறைய விஜய், அஜித் உட்பட பல நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.
பாகுபலி படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானதால் தமன்னாவுக்கு ஹிந்தியிலும் வாய்ப்பு வந்தது. இரண்டு வெப் சீரியஸ்களில் நடித்தார். இரண்டிலுமே படுக்கையறை காட்சிகளில் சிறப்பாக நடித்து பாலிவுட் ரசிகர்களை சூடேற்றினார். அதேபோல், ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு அம்மணி ஆடிய ஆட்டம் பலரின் தூக்கத்தையும் கெடுத்தது.
அதோடு வெப் சீரியஸில் அவருடன் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு காதல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்திக்கும் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.
இப்போது ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம் பால்மேனியை பலவிதமாக காண்பித்து தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், ஜொலிக்கும் உடையில் மூடாமல் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு முழு விருந்தாக அமைந்துள்ளது.