கணவனும் பனைவியும் சேர்ந்து செய்துவந்த மோசமான செயல்… வலைவீசி தேடும் போலீசார்!!

395

புதுச்சேரி….

புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம், ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சண்முகம், கட்டட கான்டிராக்டரான இவருக்கு காரைக்கால் மேல ஓடுதுறையை சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி அமுதா, அறிமுகமாகி உள்ளனர்.

இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் எனவும், புதுச்சேரியை சேர்ந்தவர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய சண்முகம், பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என அமுதாவை அணுகியுள்ளார்.

வெளிநாடு செல்ல விசா உள்ளிட்டவை எடுப்பதற்காக ரூ. 16 லட்சம் வேண்டும் என அமுதா கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமுதாவின் வங்கி கணக்கில் ரூ. 16 லட்சத்தை சண்முகம் செலுத்தி உள்ளார்.


வங்கியில் செலுத்தப்பட்ட பணத்தில் ரூ. 3 லட்சம் பணம் வந்து சேரவில்லை என அமுதா தெரிவித்துள்ளார். இதனால் ரூ. 3 லட்சம் ரொக்கம் மற்றும் சண்முகத்தின் பாஸ்போர்ட்டை கடந்த அக்டோபர் மாதம் புதுச்சேரிக்கு வந்து அமுதா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் பெற்று சென்றனர்.

அதன் பின் அமுதாவை சண்முகத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவர்கள் குறித்து விசாரித்த போது கணவன், மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து சண்முகம் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.