கணவன், காதலனுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த மனைவி.. ராத்திரியில் செய்த சம்பவம் : மிரண்ட போலீஸ்!!

262

உத்தரப்பிரதேசத்தில்..

உ.பி.யின் காஜியாபாத்தின் அருகே பஹரம்பூர் என்ற கிராமத்தில் பைக் டாக்ஸி டிரைவராக இருந்தவர் சிவம் குப்தா என்கிற சோனு (26). இவரது மனைவி பிரியங்கா குப்தா (25) இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. பிரியங்கா குப்தாவிற்கு தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கர்ஜன் யாதவ் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவன் சிவம் குப்தாவிற்கு தெரியாமல் அடிக்கடி கர்ஜன் யாதவை சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தார் பிரியங்கா குப்தா.

ஒரு கட்டத்தில் இந்த கள்ளக்காதல் விவகாரம் தெரிய வரவே சிவம் குப்தா, தனது மனைவி பிரியங்காவிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா தனது கள்ளக்காதலன் கர்ஜன் யாதவ் உடன் வீட்டை விட்டுஓடிவிட்டார்.

போகும் போது தனது இரண்டு வயது குழந்தையையும் தூக்கி கொண்டு ஓடிவிட்டார்-. இதனிடையே மனைவியை பல இடங்களில் தேடிய சிவம் குப்தா, ஒரு கட்டத்தில் கள்ளக்காதலன் கர்ஜன் யாதவ் உடன் குடும்பம் நடத்துவதை கண்டுபிடித்துவிட்டார்.


அதன்பின்னர் மனைவியை சமாதானம் செய்து அழைத்து சிவம் குப்தாவிடம், காதலன் கர்ஜன் யாதவ்வும் நம் வீட்டில் தான்இருப்பார் என்ற நிபந்தனையுடன் திரும்பி வர பிரியங்கா ஒப்புக்கொண்டார். இதன்படி சிவம் குப்தா என்கிற சோனு. அவரது மனைவி பிரியங்கா குப்தா, பிரியங்காவின் கள்ளக்காதலன் கர்ஜன் யாதவ் ஆகிய 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ஒரே படுக்கை அறை மட்டுமே உள்ள அந்த வீட்டில் ஒரு கட்டத்தில் பிரியங்காவிற்கும் கணவர் சிவம் குப்தாவிற்கும் இடையே படுக்கை அறையில் சண்டை வந்துள்ளது. இந்த சண்டையால் கோபம் அடைந்த பிரியங்கா கணவனை கொன்றுவிட முடிவு செய்தார்.

சம்பவம் நடந்த டிசம்பர் 21ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்த கணவனை கழுத்தை நெரித்தார். பெண் மற்றும் அவரது காதலர் கர்ஜன் யாதவ் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் டிசம்பர் 21 அன்று நடந்தது. பிரியங்கா தனது கணவரை தூங்கிக்கொண்டிருந்தபோது கழுத்தை நெரித்து கொன்றார்.அதே நேரத்தில் கர்ஜன் அவரை கத்தியால் பலமுறை குத்தினார். இதில் இருந்து போன சிவம் குப்தா உடலை தூக்கி எறிந்துவிட்டார்கள்.

வீட்டில் இருந்து ரத்தக்கறை கழுவி சுத்தம் செய்தனர். ஒன்றும் தெரியாதது போல் இருந்த பிரியங்கா, கர்ஜன் குப்தாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.