கார் முதல் கழிவறை வரை இவர் வீட்டில் எல்லாம் சிவப்பு வெள்ளை தான்… ஏன் தெரியுமா?

452

செவன் ராஜ்…………..

பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தன் வீடு, ஆடை, கார், வீட்டில் உள்ள பொருட்கள் என எல்லாவற்றையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இவரை பற்றிய முழு தகவலை கீழே காணலாம் வாருங்கள்.

உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் மனிதர் தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவன் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம் தான்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் செவன்ராஜ் 58 வயதாகும் இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் தனித்துவம் என்னவென்றால் இவரின் வீட்டிலிருந்து இவரது ஆடை, இவரது வீட்டுப் பொருட்கள் என இவருக்குச் சொந்தமான அனைத்து பொருட்களும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே இருக்கிறது. இவர் அந்த நிறத்தின் மீது காதல் கொண்டு தான் வாங்கும் அத்தனை பொருட்களும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் எனக் கவனமாக இருக்கிறார்.


இது குறித்து இவர் கூறும் போது : “எனக்கு 18 வயதிருக்கும் போது காந்தியின் தீவிரமான ரசிகனாக இருந்தேன். அவருக்கு அடையாளம் எளிமையான அவரது ஆடைகளும், அவரது கண்ணாடியும் தான். அப்பொழுதுதான் எனக்கு என்று ஒரு தனித்துவமான அடையாளம் வேண்டும் என நினைத்தேன். அதனால் எனக்குப் பிடித்த நிறமான சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே எனது பொருட்களையும் வாங்க வேண்டும் என நினைத்தேன்.

எனக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவியும் எனது விருப்பங்களைப் புரிந்து கொண்டு அவரும் வீட்டுப் பொருட்களை எல்லாம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே வாங்கினர். தற்போது எனக்கு மகன் மற்றும் மகளும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே உடை உட்பட அனைத்து பொருட்களும் வாங்கி வருகின்றனர். எங்கள் வீட்டில் உள்ள அத்தனை பொருட்களும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். எங்கள் வீட்டு கார் முதல் கழிவறை வரை அந்த நிறம் தான். நான் சாகும் வரை இந்த சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் தான் இருப்பேன் ” எனக் கூறினார்.

செவன்ராஜ் குடும்பம் சிவப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமல்ல மற்றொன்றிலும் தனித்துவமாக இருக்கின்றனர். செவன்ராஜ் என்ற பெயர் அவரது தாய் தந்தை அவருக்கு வைத்த பெயர். அதில் செவன் என்பது ஆங்கிலத்தில் 7ம் எண்ணைக் குறிக்கும். வீட்டில் ஏழாவது குழந்தையாகப் பிறந்ததால் அவரது பெற்றோர் செவன் ராஜ் எனப் பெயரிட்டுள்ளனர். அதனால் அவர் பயன்படுத்தும் எண்களில் எல்லாம் 7ம் எண் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார். அவர் கார் எண் கூட 7 தான். இவரது குடும்பம் தனித்துவமான வாழ்க்கை முறை என்ற பெயரில் “வேல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.