குமட்டும் ஆபாசம்… பொறியில் சிக்கிய “பச்சைக்கிளி”.. வயசுக்கு மீறிய உறவு.. நடந்த விபரீதம்!!

1013

கேரளா..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் சங்கரன். 66 வயதாகிறது. பேங்க்கில் வேலை பார்த்துவிட்டு ரிடையர் ஆனவர். மனைவி இறந்துவிட்டார்.

இவருடைய மகள் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். மனைவியும் இல்லாததால், மகளை சங்கரனால் கவனித்து கொள்ள முடியவில்லை. 66 வயதாகிவிட்டதால், தன்னையும், மகளையும் யாராவது ஒரு பெண் கவனித்து கொண்டால் நன்றாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதற்காக தன்னுடைய நண்பர் மோகன் என்பவரிடம் இதை பற்றி சொல்லவும், அவரும் உதவி செய்வதாக கூறினார். சில நாட்களுக்கு பிறகு, மோகன் நூரநாடு பகுதியை சேர்ந்த அஸ்வதி என்ற பெண்ணை பற்றி சொன்னார்.


39 வயதாகிறது என்றும், அந்த பெண் நன்றாக இருவரையும் கவனித்து கொள்வார் என்றும் சொல்லி, சங்கரன் வீட்டில் கொண்டுவந்து வேலைக்கு சேர்த்துவிட்டார்.

ஒருநாள் அஸ்வதி, தனக்கு நிறைய கடன் இருப்பதாகவும், அதனை உடனே கட்டவேண்டும் என்றும் சொல்லி ரூ.40 ஆயிரம் கேட்டிருக்கிறார். சங்கரனும் அந்த பணத்தை தந்து உதவியிருக்கிறார்.

பிறகு சில நாட்களுக்கு சங்கரனிடம் திருமணம் செய்து கொள்வதாகவும், ஆனால், கடன் 60 ஆயிரம் இருக்கிறது, அந்த கடனை அடைத்தால் உங்களையே கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றும் சொல்லி, ரூ.60 ஆயிரம் கேட்டுள்ளார்.

அந்த பணத்தையும் சங்கரன் தந்துள்ளார். ஒருநாள் அஸ்வதி, சங்கரனிடம் தன்னுடைய ஆதார்கார்டு, ரேஷன் கார்டு வீட்டில் உள்ளதால், அதை எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார். ஆனால், திரும்பி வரவேயில்லை..