குளத்தில் மீன்வலையை வீசிய மீன்பிடிப்பாளர்! வலையை இழுத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

802

தமிழகத்தில் குளத்தில் மீன் வலையை வீசி நபர்கள் காத்திருந்த நிலையில் அதில் 6 அடி மலைப்பாம்பு சிக்கியது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் முகவூரில் இருந்து சொக்கநாதன் புத்தூர் செல்லும் வழியில் தொண்டைமான் குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள் வலைவிரித்து வைத்திருந்தனர்.

காலை வலையின் ஒரு பகுதி அறுந்து இருப்பதைக் கண்ட மீன்பிடிப்பாளர், வலையை இழுத்துப்பார்த்தார். அப்போது வலைக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கி இருந்தது. அதைக்கண்டதும் மீன்பிடிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாம்பின் கீழ் பகுதி முழுவதும் வலையில் சிக்கி இருந்ததால், அது தப்பிக்க முடியாமல் வலையை அறுத்திருந்தது தெரியவந்தது. வலையை இழுத்து பாம்பை பிடித்த மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம் பாம்பை ஒப்படைத்தனர். வனத்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

கடந்த மே மாதம் 30ம் திகதி , கடந்த ஜூன் 25ம் திகதி மற்றும் 30ம் திகதி என இந்த குளத்தில் மலைப்பாம்புகள் பிடிபட்ட நிலையில், தொடர்ச்சியாக இன்றும் 4வது முறையாக மற்றொரு மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.

இந்த குளத்தின் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும் தொடர்ந்து மலைப்பாம்புகள் பிடிபடும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.