கொடிய விஷப் பாம்பு கடித்தாலும்… நாகப் பாம்பை வைத்து நிரூபிக்க முயன்ற நபருக்கு நேர்ந்த கதி! பதறி போன மக்கள்!!

960

சீனாவில் சந்தை ஒன்றில், மருத்துவ குணம் கொண்ட நாட்டுப்புற மருந்தை விற்கும் முயற்சியின் போது, அந்த நபர் பாம்பால் கடிபட்டு கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சீனாவின் தெற்கு மாகாணமான Guangxi-ன் Laibin கடந்த புதன் கிழமை கூடிய சந்தையில், பெயரிடப்படாத நபர், தன்னிடம் இருக்கும் நாட்டு மருந்து, ஊர்வன காயங்களை(பாம்பு, பல்லி, தேள் போன்றவை கடித்தால் ஏற்படும் காயங்கள்) குணப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

அதன் படி அதை நிரூபிப்பதற்காக தன்னிடம் இருந்த விஷப் பாம்பை எடுத்து, அதை நிரூபிக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பாரதவிதமாக பாம்பானது அவரை கடித்து விட, அந்த இடத்திலே சரிந்து விழுந்துள்ளார்.

இதனால் இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த மருத்துவர்கள், அவரைக் காப்பாற்ற சுமார் இரண்டு மணி நேரம் போராடினர்.


ஆனால், அவர் உயிர் இழந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால்,

பொலிசார் குறித்த பகுதிக்கு விரைந்து வந்து, பாம்பை பறிமுதல் செய்து சென்றதாக நம்பப்படுகிறது.

மேலும், அந்த நபர் கையில் வைத்திருந்த பாம்பு, கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.