சாலையோரத்தில் துண்டான நிலையில் கிடந்த மனிதனின் கால்!!

894

பிரித்தானியாவில் சாலையோரத்தில் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று தனியாக கிடந்ததால், இதைக் கண்டு அவ்வழியே சென்ற டிரைவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் Cornwall-ல் இருந்து புகைப்பட( photojournalist) கலைஞர் Greg Martin கடந்த வெள்ளிக்கிழமை Polperro காரில் சென்று கொண்டிருந்த போது, சாலை ஓரத்தில் கொடூரமான துண்டாக கால் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின், அருகில் சென்று பார்த்த போது அது ரப்பரால் ஆன போலியால் கால் என்பது தெரியவந்தது.இது குறித்து அவர் கூறுகையில், நான் பாதத்தைப் பார்த்தவுடன், தாண்டி செல்லும் சாதரண நபராக இருக்க விரும்பவில்லை. இதனால் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கலாம் என்று இருந்தேன்.

ஆனால், நான் அப்படி செய்யவில்லை, ஏனெனில் அந்த கால் ரப்பரால் ஆனது என்பது எனக்கு தெரியவந்ததாக கூறியுள்ளார்.


இப்பகுதியில் மக்களை பயப்படுத்துவதற்காக பல செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுவதால், அவற்றில் ஒன்றாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.