சித்தியுடன் கள்ள உறவில் இருந்த கணவன்… சந்திரமுகியாக மாறி மனைவி : இறுதியில் நடந்த சோகம்!!

7736

கடலூர்…

தனது சித்தியுடன் கள்ள உறவில் இருந்து வந்த கணவனுக்கு அவரது மனைவி கொடுத்த தண்டனையை கண்டு போலீஸாரே மிரண்டு போயுள்ளனர். மனைவி இருந்தாலும் அடுத்த பெண்களை தேடும் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு நிச்சயம் இந்த சம்பவம் வயிற்றில் புளியை கரைக்கும்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (39). இவருக்கும் சுதா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு குழந்தையும் உள்ளது.

இதனிடையே, அண்மைக்காலமாக சுவாமிநாதனின் நடவடிக்கையில் மனைவி சுதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வெளியூர் செல்வதாக கூறி அடிக்கடி காணாமல் போவதும், வேலைக்கு சென்றுவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வருவதுமாக இருந்திருக்கிறார் சுவாமிநாதன்.


இதையடுத்து, சுவாமிநாதனின் வாட்ஸ் அப் சாட்டுகளை பார்த்த சுதா அதிர்ச்சியில் உறைந்தார். ஏனென்றால், தனது சித்தியுடனேயே திருமணத்தை மீறிய உறவில் சுவாமிநாதன் இருந்தது அவருக்கு தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, சுவாமிநாதனிடம் அந்த உறவை விட்டுவிடுமாறு சுதா எச்சரித்துள்ளார். ஆனால், சுவாமிநாதனோ வழக்கம் போல தனது லீலைகளை செய்து வந்திருக்கிறார்.

இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்றும் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

சுவாமிநாதனிடம் எவ்வளவு சொல்லியும் சித்தியுடனான உறவை அவர் விடுவதாக இல்லை. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுதா, வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சுவாமிநாதனின் முகத்தில் வீசியுள்ளார்.

இதில் நிலைக்குலைந்த சுவாமிநாதனின் வேட்டியை உருவி நிர்வாணமாக்கிய சுதா, அவரை கண்மூடித்தனமாக குத்தினார். இதில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

முகத்தில் மிளகாய் பொடியின் எரிச்சலும், உடலில் கத்திக்குத்துமாக வலியில் துடித்தார் சுவாமிநாதன். இதையடுத்து, நிதானமாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுதா சரணடைந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த சுவாமிநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.