செம.. ஓடும் ரயிலில் பெல்லி டான்ஸ்… வைரல் வீடியோ!!

555

மெட்ரோ ரயிலில்..

சமீபகாலமாக மெட்ரோ ரயில் பயணங்களில் பல்வேறு சர்ச்சைகள் , கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மெட்ரோவில் நடனம், மெட்ரோவில் ஆபாச செயல், காதலர்கள் அருவறுப்பு என தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் டெல்லி மெட்ரோ போலவே, மும்பை மின்சார ரயிலும் மக்களுக்கு தினசரி புதுப்புது அனுபவங்களைத் தருகிறது.

மும்பை மெட்ரோவில் தெருவோர வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்வது முதல் நடனம் மற்றும் பாடுவது வரை பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஆனால் தற்போது இந்த வைரல் வீடியோவில் ஒரு பெண் ரயிலில் பெல்லி டான்ஸ் ஆடி தன் முழு திறமையையும் அதில் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவில் நீல நிற ஆடை அணிந்து, ஓடும் ரயிலில் தனது பெல்லி நடனத்தை வெளிப்படுத்துகிறார். அந்த இடம் சாண்ட்ஹர்ஸ்ட் சாலை மற்றும் மஸ்ஜித் நிலையங்களுக்கு இடையில் உள்ளது. ரயிலிலும் இதுபோன்ற பல விஷயங்கள் நடக்கின்றன என்று கேப்ஷனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவில் இந்திய ரயில்வே அமைச்சகமும் டேக் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் விதவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மும்பை ரயில்களில் இவ்வளவு இடம் இருப்பது ஆச்சரியம் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன் மும்பை உள்ளூர் ரயிலில் ஒருவர் லதா மங்கேஷ்கரின் பிரபலமான பாடலைப் பாடிய வீடியோ வைரலாகியது குறிப்பிடத்தக்கது. வீடியோவில், அவர் பாடும்போது மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். அத்துடன் மற்ற சக பயணிகளும் நடனமாடத் தயாராக இருக்கின்றனர்.