சைடு போஸில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை இம்சை செய்யும் பிரக்யா!!

483

பிரக்யா நாக்ரா…

ஹரியானாவை பூர்வீகமாக கொண்டவர் பிரக்யா நாக்ரா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். இவரின் அப்பா சென்னையில் பணிபுரிந்ததால் அடிக்கடி சென்னை இவருக்கு மிகவும் பரிச்சயம். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார்.

மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் அதுவே பழக்கமாகி அதிக விளம்பர படங்களில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். அதோடு, விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி எனும் சீரியலிலும் நடித்திருந்தார்.

ஆனாலும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். பல வருடங்களுக்கு பின் ஜீவா ஹீரோவாக நடித்து வெளியான வரலாறு முக்கியம் என்கிற படத்தில் மலையாள பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் N4 என்கிற படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.


எப்படியாவது சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கிடைத்து வருகிறது. அந்த வகையில், புடவையை கவர்ச்சியாக அணிந்து சைடு போஸ் கொடுத்து பிரக்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.