டியூஷனுக்கு வந்த மாணவனிடம் நெருக்கம்… ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!

838

திருச்சியில்..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (40). துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார். தேவிக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து சித்திரப்பட்டி பகுதியில் தனியாக வசித்துவந்திருக்கிறார். பள்ளிக்குச் சென்று வந்த பிறகு மாலை நேரங்களில் சித்திரப்பட்டியிலுள்ள தனது வீட்டில், தேவி டியூஷன் நடத்திவந்திருக்கிறார்.

அந்த வகையில், தேவி பணிபுரியும் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்த துறையூரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் டியூஷனுக்குச் சென்று வந்திருக்கிறார்.


ஒருகட்டத்தில் ஆசிரியை தேவிக்கும் டியூஷனுக்கு வந்த 16 வயது மாணவனுக்கும் இடையே தொடர்பு உண்டாகியிருக்கிறது. இருவரும் செல்போனில் அடிக்கடிப் பேசிவந்ததும்,

படிப்பில் கவனமில்லாமல் மாணவன் சுற்றியலைந்ததும் பெற்றோருக்குத் தெரியவந்திருக்கிறது. மாணவனின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர் என்னவென்று அதட்டி விசாரிக்க,

இருவருக்குள்ளும் நெருக்கமான தொடர்பு இருப்பதும், ஆசிரியை தேவி உடல்ரீதியாக மாணவனிடம் பழகியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து சிறுவனின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் தேவி மீது புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி, முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுபலக்ஷ்மி ஆகியோர் விசாரணை செய்ய, ஆசிரியை தேவி மாணவனிடம் தவறாக நடந்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து ஆசிரியை தேவி மீது போக்சோ வழக்கு பதிவுசெய்து கைதுசெய்த போலீஸார், பாதிக்கப்பட்ட மாணவனை திருச்சியிலுள்ள அரசுக் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர்.