தனது 2 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய இளம்ஜோடி! வெளியான பகீர் சம்பவம்!

866

புனே சுஹ்சாகர் பகுதியில் வசித்து வந்தவர் அதுல் ஷிண்டே. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு ருக்வித் என்ற ஆறு வயது மகனும், அந்தரா என்ற மூன்று வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதுல் ஷிண்டேவின் நண்பர் ஒருவர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் வெகு நேரமாக கதவை தட்டியும் எந்த பதிலும் இல்லை


இந்நிலையில் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு குழந்தைகள் உட்பட கணவன்-மனைவி அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மேலும் அங்கு சுவற்றில், எங்கள் தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல. எங்களது சூழ்நிலையே காரணம் என எழுதப்பட்டிருந்தது.