தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிப பெண் உயிரிழப்பு!!

1152

வெளிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

வெலிசரை கடற்படை முகாமில் கடமையாற்றிய படைச் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியானதைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களில் குறித்த படைச் சிப்பாயின் பாட்டியே அரநாயக்க பகுதியில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் இறுதிக் கிரியைகள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவுள்ளது.

எனினும் உயிரிழந்த வயோதிப் பெண் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை

கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த கடற்படை சிப்பாய் கடந்த மாதம் 22ம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு சென்று 27ம் திகதி மீண்டும் வெலிசறை கடற்படை முகாமுக்கு திரும்பியிருந்தார்.


இந்நிலையில் குறித்த சிப்பாய்க்கு கடந்த 28ம் திகதி கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.