தலித் இளம்பெண்ணை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!!

1593

பீகாரில்..

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மோசிம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தலித் இளைஞர் இவர் உயர்சாதியை சேர்ந்த ஒருவரிடம் கந்து வட்டிக்கு சிறுதொகையை கடனாக பெற்று உள்ளார். காலக்கிரமத்தில் கடனுக்கான அசல் மற்றும் வட்டியை திருப்பி செலுத்திவிட்டதாக தலித் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், பிரமோத் சிங் தரப்பில் ரூ1500 வட்டி நிலுவையில் இருப்பதாகவும், அதனை உடனடியாக திருப்பி செலுத்துமாறும் மிரட்டி வந்துள்ளனர். இந்த தகவல் குறித்து பிரமோத் சிங், அவரது மகன் அன்சு குமார் மற்றும் 4 ஆண்கள், சனிக்கிழமை இரவு தலித் பெண்ணின் வீடு புகுந்து அவரை அடித்து, இழுத்துச் சென்றுள்ளனர். அவரிடம் ரூ.1,500 வட்டித் தொகையை கேட்டு கட்டையால் அடித்தவர்கள்,

தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தியும் சித்ரவதை செய்துள்ளனர். உச்சகட்ட்டமாக, தலித் பெண்ணின் வாயில் அன்சு குமார் சிறுநீர் கழித்துள்ளார்.

தலித் பெண்ணின் குடும்பத்தினர் பல இடங்களிலும் அவரை காணாது தேடியவர்கள், பின்னர் ஆடையற்று மயங்கிய நிலையில் கிடந்தவரை மீட்டு வந்திருக்கின்றனர். அடுத்த நாள் அந்த கிராமத்தில் இருந்து நகரத்துக்கு பிழைப்புக்காக செல்லும் தொழிலாளர்கள் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


24 மணி நேரம் கழித்து, தலித் பெண் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக அந்த கிராமத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.

தலித் பெண்ணை சித்திரவதை செய்த பிரமோத் சிங் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர். இந்நிலையில் தங்களுக்கு அந்த கிராமத்தில் பாதுகாப்பு இல்லை என, அங்கு வசிக்கும் தலித் மக்களை வேறு ஊருக்கு குடியமர்த்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.