திருநெல்வேலியில்..
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் செயல்பட்டு வருகிறது சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்டெல்லா ஜெயசெல்வி. இவர் இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்அங்கு பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி வந்துள்ளார். இந்நிலையில் தளபதி சமுத்திரம் கீழுர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவரையும், மாணவி ஒருவரையும் ஆபாசமாக திட்டியுள்ளார்.
இது குறித்து மாணவரின் பெற்றோர் ஆசிரியை ஜெயசெல்வி குறித்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தி, ஸ்டெல்லா ஜெய செல்வியிடம் விளக்கம் கேட்டு,மெமோ கொடுத்துள்ளார்.
அப்போது ஆசிரியை ஜெயசெல்வி மெமோவை கிழித்து எரிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியையும் ஆபாசமாக பேசியுள்ளார். அத்துடன் நில்லாமல் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து பறித்து கையில் கடித்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஆசிரியையிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வேதியியல் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.