திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன் அவருடனே சேர்ந்து தற்கொலை!

891

திருநங்கையை காதலித்து திருமணம் செய்ய நினைத்த இளைஞன், இறுதியில் அவருடனே சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப்(26). இவருக்கு நிரவி பகுதியை சேர்ந்த ஷிவானி என்றா 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஆகியுள்ளார்.

முதலில் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதன் பின் இருவருக்கும் காதல் வந்துள்ளது. இந்த விஷயம் எப்படியோ திலீப்பின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் ஒரு திருநங்கையை எப்படி உனக்கு திருமணம் செய்து வைப்பது, முடியவே, முடியாது என்று திலீப்பை கண்டித்துள்ளார்.

ஆனால், திலீப்பால், ஷிவானியை மறக்க முடியவில்லை. இதனால் கடந்த மாதம் திலீப் வீட்டை விட்டு வெளியேறி, ஷிவானியை அழைத்துக் கொண்டு, காரைக்கால் ஒடுதுறை பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து வசித்துள்ளார்.


வந்த சில நாட்களிலே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை இருவரும், வீட்டின் அறையில் தூக்கி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து அந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், திலீப்பை கொலை செய்துவிட்டு ஷிவானி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது 2 பேருமே ஒன்றாக தூக்கில் தொங்கினார்களா என தெரியவில்லை. இதனால் இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.