திருமணம் முடிந்து 15 நாளில் ஏற்பட்ட அதிர்ச்சி… வீடு புகுந்து பெண்ணை கடத்திச் சென்ற பெற்றோர்!

913

திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில், கணவர் வீட்டிலிருந்து பெண்ணை மர்ம நபர்கள் மூலம் பெண்ணின் பெற்றோர்கள் கடத்திச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம் லூனா நகர், வித்யா காலனியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழினி பிரபா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

கார்த்திகேயன் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால், வீட்டை விட்டு வெளியேறிய தமிழினி கார்த்திகேயனை பதிவு திருமணம் செய்துள்ளார்.


பின்பு கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், திடீரென வந்த தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கார்த்திகேயன் மற்றும் அவரது தாயை தாக்கிவிட்டு தமிழினியை கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கார்த்திகேயன் வீட்டில் வசதி இல்லை எனவும், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.