துணி துவைக்க சென்ற இடத்தில் சோகம்.. கிணற்றில் தவறி விழுந்த மகன்.. காப்பற்ற முயன்ற தாய்.. இருவருக்கும் நேர்ந்த விபரீதம்!!

259

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராணி (35). இவரது மகன் பிரவீன் (15) இருவரும் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றனர். அப்போது, ​​கிணற்றின் அருகே அமர்ந்திருந்த பிரவீன்குமார் தவறி கிணற்றில் விழுந்தார்.

இதை பார்த்த விமல் ராணி மகன் பிரவீனை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். இந்நிலையில் இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அதன்பின், வயல்வெளியில் வேலை செய்துவிட்டு, துணி துவைக்கச் சென்றவர்கள், நீண்ட நேரமாகியும் அவர்களை காணவில்லை என, அங்கு சென்று பார்த்தனர்.

அப்புறம் புடவை மட்டும் மேலே மிதந்து கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கிணற்றில் தண்ணீர் நிரம்பியதால் இருவரையும் மீட்க மீட்புக் குழுவினர் போராடி கிணற்றில் இருந்து இறந்த இருவரையும் மீட்டனர்.


இதையடுத்து, இருவரது உடல்களையும் கைப்பற்றிய அணைக்கட்டு போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.