’தென்னங்கன்று நட குழி தோண்டுறேன்’ மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்.. அதிர்ச்சி பின்னணி!!

81

பெங்களூரு கோடிகெரேபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சோம்புரா தொழிற்பேட்டை ஒன்று சீனிவாசனின் நிலத்தை கையகப்படுத்தியதற்காக ரூ.1.1 கோடி நஷ்டஈடாக செலுத்தியுள்ளது.

இந்த பணத்தை பெற்றுக்கொண்டு சீனிவாசன் மாறிவிட்டதாக தெரிகிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு கடன் கொடுப்பது மட்டுமின்றி, குடிப்பழக்கத்திற்கும் அடிமையானவர் சீனிவாசன்.

இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரின் இத்தகைய நடத்தை குறித்து ஜெயலட்சுமி கவலைப்பட, அவர் தனது குடும்பத்திற்கு 35 லட்சம் ரூபாயை சேமிப்பாக கொடுத்துள்ளார்.

சம்பவத்தன்று சீனிவாசன் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் சீனிவாசனுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் தனது மனைவியிடம் இருந்த 35 லட்சத்தை கேட்டார். இதில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன், மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றார். பின்னர் உடலை மறைக்க முடிவு செய்து ஜெயலட்சுமியின் உடலை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தார். பிறகு ஒன்றும் ஆகாதது போல் நடுத்துள்ளார். இதையடுத்து அம்மா எங்கே என்று குழந்தைகளிடம் கேட்க, ஜெயலட்சுமி வெளியே போயிருக்காள் என கூறியுள்ளார்.

ஆனால், அன்று இரவு குழந்தைகள் தூங்கச் சென்ற பிறகு யாருக்கும் தெரியாமல் சீனிவாசன் தோட்டத்தில் குழி வெட்டத் தொடங்கினார். இதைப் பார்த்த குழந்தைகள் அவரிடம் கேள்விகள் கேட்டு, காலையில் தென்னை மரக்கன்று நடுவதற்கு குழி தோண்டவதாக கூறியுள்ளார்.


மறுநாள் காலை அவள் மகள் தண்ணீர் தொட்டியின் அருகே சென்றபோது, அங்கே ஜெயலெட்சுமியின் கால்களைப் பார்த்தாள். பீதியடைந்த மகள் சீனிவாசனிடம், தண்ணீர் தொட்டியில் அம்மாவின் பாதங்கள் தெரிகின்றன என்று கூற, மீண்டு வந்த சீனிவாசன், நான்கு கால்கள் என்று மழுப்பினார்.

இருப்பினும், குழந்தைகள் சம்பவம் குறித்து தங்கள் தாய் மாமா ராஜேஷிடம் தெரிவித்தனர். பின்னர், அங்கு வந்த ராஜேஷ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த சீனிவாசன், பின்னர் போலீஸ் விசாரணையில் நடந்ததை ஒப்புக்கொண்டார்.