தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன்! தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர்… கடிதத்தில் இருந்த வார்த்தைகள்!!

914

இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் மன்சி மண்டல் (26). இவர் பயிற்சி மருத்துவராக உள்ளதோடு முதுகலை மருத்துவப்படிப்பு 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மூன்று பெண்களுடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் மன்சியுடன் தங்கியிருந்தவர்கள் கிளம்பி வகுப்புக்கு சென்றனர். ஆனால் மன்சி மட்டும் விடுதி அறையிலேயே இருந்தார்.


அந்த சமயம் மன்சியின் பெற்றோர் அவருக்கு போன் செய்தும் எடுக்கவில்லை.

இந்த சூழலில் மதியம் 1 மணிக்கு மன்சியின் தோழிகள் அறைக்கு வந்த போது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் உடனடியாக பொலிசார் அங்கு வந்து அறை கதவை உடைத்தனர், அப்போது மன்சி தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து சக தோழிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அங்கு மன்சி கைப்பட எழுதியிருந்த கடிதத்தில், திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தார் தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.

இதனால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என எழுதப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மன்சி உயிரை மாய்த்து கொண்டுள்ளார் என கருதும் பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.