நண்பர்களின் முன்பு நெப்போலியனை மோசமாக திட்டிய விஜய்.. காரணம் என்ன தெரியுமா?

939

நடிகர் நெப்போலியன் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார்.

1991ல் பாரதிராஜவால் புது ‘நெல்லு புது நாத்து’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறார் நெப்போலியன். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார்.

அழகிரியின் விசுவாசியாக ஒருந்த நெப்போலியன், ஆகியுள்ளார். திமுகவை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.


இந்நிலையில் தற்போது, நெப்போலியன் திரைத்துரையில் கவனத்தை குறைத்தே இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜயை பற்றி ஒரு கேள்வி எழுப்பியதற்கு, அவர் கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை அவர் படங்களையும், பார்ப்பதில்லை என கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த விவகாரம், கடந்த பல வருடங்களாக கிசுகிசுவாகவே சுற்றி வந்த நிலையில் இன்று இது உண்மையாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். போக்கிரி படம் வெளியான போதே இதுகுறித்த கிசுகிசுக்கள் பறந்தன.

அப்படி என்ன தான் விஜய்க்கும் நெப்போலியனுக்கும் பிரச்னை என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறிய காரணத்தை இங்கே பார்க்கலாம்..

நடிகர் நெப்போலியனின் நெருங்கிய நண்பர்கள் சிலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள்.

நெப்போலியன் போக்கிரி படத்தில் நடிக்கும் நேரத்தில் அவரது நண்பர்கள் விஜய்யை சந்திக்க முடியுமா? என கேட்க, விஜயை பாக்கணும் அவ்ளோ தானே வாங்க போலாம், பாக்குறது மட்டும் இல்ல, போட்டோவும் எடுத்துக்கலாம் என்று போக்கிரி படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அதன் பிறகு நடந்த கூத்து தான் நெப்போலியனுக்கும், விஜய்க்கும் ஏற்பட்ட மனக்கசப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. நடிகர் நெப்போலியன் பெரிய நடிகர், பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், அன்றைய தினம் விஜய்யிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் அவருடைய நண்பர்களை சந்திக்க வைக்க வேண்டி விஜய்யின் கேரவேன் கதவை திறந்துள்ளார்.

கேரவேன் கதவருகே அமர்ந்திருந்த விஜய்யின் பாதுகாவலர் நெப்போலியனை தடுத்துள்ளார். சார் உங்களை பத்தி எதுவும் சொல்ல வில்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் கிட்ட கேட்டுட்டு வந்துடறேன் என்று கூறியுள்ளார்.

இதனால், அவமானப்பட்ட நெப்போலியன் அந்த பாதுகாவலருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடவே படப்பிடிப்பு தளம் கலவரமாகியுள்ளது.

வெளியில் சத்தம் வருவதை உணர்ந்த நடிகர் விஜய் கேரவேனுக்கு வெளியே வந்து நெப்போலியனிடம் சார்!.. உங்களுக்கு கொஞ்சமம் கூட மேனர்ஸ் இல்லையா..? என்று முகத்தில் அடித்தது போல கோபமாக பேசியுள்ளார்.

அதுவும், நடிகர் நெப்போலியனின் நண்பர்கள் முன்னிலையிலேயே திட்டியதால் நெப்போலியன் கடும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

இது தான் நெப்போலியனுக்கு, விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகி விட்டது என்று கூறுகிறார்கள் நேரில் கண்டவர்கள்..