நவீன கருவியுடன் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 சந்தேக நபர்கள்!!

1070

மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈ டுபட்ட 6 பேர் கை து செய்ய ப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் புதையல் எடுக்க பயன்படுத்திய நவீன கருவி ஒன்றும் மீட்க ப்பட்டுள்ளது.

நேற்றுமுன் தினம் இரவு புதையல் தோண்டுவதாக பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த த கவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 நபர்களும், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா மற்றும் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரும் பேசாலை பொலிஸ் நிலையத்தில் த டுத்து வை க்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று மாலை மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆ ஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த 6 சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல அனு மதிக்கப்பட்டமை குறி ப்பிடத்தக்கது.