பிறந்த நாள் அன்று இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்.. கதறும் உறவினர்கள்!!

3864

சென்னையில் ..

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சேவிகா. இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சேவிகாவுக்கு இன்று பிறந்தநாள். இதனால் நேற்று இரவு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சேவிகாவின் தோழிகள் அவர்களது அறைக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து அவர் தி.நகரில் உள்ள தோழிகள் அறைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, ராபிடோ பைக்கில் வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை ஆனந்தன் என்பவர் ஓட்டியுள்ளார்.

இதையடுத்து இருசக்கர வாகனம் இன்று அதிகாலை அண்ணா சாலை காமராஜர் அரங்கம் அருகே வந்து அடையாளம் தெரியாத டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.


இந்த விபத்தில் ரேபிடோ ஒட்டுநர் ஆந்தன் மற்றும் சேவிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சேவிகாகை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரேபிடோ ஓட்டுநர் ஆனந்தன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்த நாள் அன்று சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.